மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்திற்கான தேர்தல் பிரச்சார அலுவலகம் திறப்பு.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்திற்கான ஜனாதிபதி தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு காரைதீவு பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளரும் மாளிகைக்காடு கிழக்கு வட்டார செயற்குழு தலைவருமான எம்.எச்.நாஸர் தலைமையில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவுக்கு இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சியின் போராளிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post