யாழ். வைத்தியரின் வாகனம் எரிக்கப்பட்டு, உடைமைகளுக்கும் சேதம், ஐவர் கைது!!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் சித்த வைத்தியர் ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு தீவைத்து, சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி, குருனானந்த சுவாமி லேனில் இந்தச் சம்பவம் கடந்த 7ஆம் திகதி இரவு இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் வீட்டின் முன்பக்கம் தீயால் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீ அணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.

வைத்தியரின் முறைப்பாட்டையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பின்னணி கண்டறியப்பட்டு ஐவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விசாரணைகளின் பின்னர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து சந்தேக நபர்கள் ஐவரையும் வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது

No comments

Powered by Blogger.