கட்டார் பிளாஸா கொலண்டி நிறுவன இலங்கை ஊழியர்கள் சார்பாக கல்லடி மயானத்தில் இறுதி அஞ்சலி மண்டபம்!!


கல்லடி உப்போடையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் இறுதி அஞ்சலி நிகழ்த்துவதற்கான மண்டபத்திற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15.11.2019) அன்று நடைபெறவுள்ளது.

இந்த அஞ்சலி கட்டடமானது கட்டாரில் அமைந்துள்ள PLAZA HOLLANADI நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கை ஊழியர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ளது.

PLAZA HOLLANADI நிறுவன முகாமையாளர் பாலசுப்பிரமணியம் கங்கேஸ்வரன் (ஈசன்) அவர்களின் ஆலோசனைக்கு அமைய 2.5 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அஞ்சலி மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் தியாகராஜா சரவணபவன் கலந்துகொள்கிறார்.

குறித்த  அஞ்சலி  மண்டபத்தில் தேவை ஏற்படுமிடத்து மரணித்தவரின் உடலத்தை நீண்ட நேரம் வைத்து  அஞ்சலி  செலுத்துவதற்கான வசதிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி மண்டபம் அமைப்பதற்கான செயல்திட்டத்தை  மட்டக்களப்பு-கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியம் மேற்கொள்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post