மட்டக்களப்பில் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர்!!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களை கொண்ட குழுவினர் நேற்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் பிரதான வாக்கெண்ணும் நிலையத்திற்கு வருகை தந்து தங்களின் அவதானிப்புக்களை செய்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரான மாணிக்கம் உதயகுமாரை குழுவினரை சந்தித்து தேர்தல்களின் முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டனர்.

கண்காணிப்பு குழுவினர் வாக்குசீட்டு வாக்குப்பெட்டிகள் வழங்கும் நிலையங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

இதே போன்று உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து தங்கள் கண்காணிப்பு பணியினை செய்து வருவதை அவதானிக்க முடிந்தது .

0/Post a Comment/Comments

Previous Post Next Post