நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும்-அநுர.

இன்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பஞ்சிகாவத்தை அபேசிங்கராம விகாரைக்கு அருகில் அமைந்திருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த அநுரகுமார திசாநாயக்க ,

'நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதுவரையில் ஆட்சி செய்தவர்கள் நாட்டை எந்தளவுக்கு சீரழித்திருக்கிறார்கள் என்பதை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

எனவேதான் இம்முறை தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். எமது எதிர்பார்ப்பு வெற்றியளிக்கும். அந்த வெற்றியை மக்கள் எமக்கு பெற்றுக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post