ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகியது,

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

கூட்டமைப்பு சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருடன் மற்றும் பலர் போட்டியிடுகின்றனர். 

இதில் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகின்ற நிலையில், தேர்தல் விஞ்ஞாபனங்களில் சஜித் பிரேமதாசவின் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பது சரியான தீர்மானமாக அமையும் என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post