சுமங்கல தேரர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்.ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தமது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டமை தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கோரி இங்குருவத்தே சுமங்கல தேரர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் சுதந்திர சதுக்கத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அந்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post