திருகோணமலை மண்ணில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!!!


ஜனாதிபதி வேட்பாளர் எம். கே. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனமும் பொதுக்கூட்டமும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிகழ்வு 'திருகோணமலை பிரகடனம்' எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 10.00மணிக்கு திருகோணமலை நகர சபைக்கு அருகேயுள்ள வெலிக்கடை தியாகிகள் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எம். கே. சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் வடக்கு கிழக்கிலிருந்து புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post