மட்டு- பாலமீன்மடு கிராமத்தினுள் புகுந்த ராட்சத முதலை; கிராமத்து இளைஞர்களின் துணிகர செயலால் பிடிக்கப்பட்டது!!

பாலமீன்மடு கதிர்காமர் வீதியில் இன்று இரவு மக்கள் குடியிருப்பு பகுதியில் 12 அடி நீளமான ராட்சத முதலை புகுந்ததன் காரணமாக அப்பகுதி மக்களிளிடையே பதற்ற நிலமை ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து பிரதேச இளைஞர்களின் துணிகர முயற்சியால் குறித்த இராட்சத முதலை பிடிக்கப்பட்டு பின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலர் முதலைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதுடன் கால்நடைகள் பலவும் காணமல் போய் வருவதும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.