அம்பாறை மாவட்ட பெரிய நீலாவனை இளைஞன், மட்டக்களப்பு மாவட்ட, கேணி நகரில் மரணம்.

பெரிய நீலாவனை, கஸ்ஸாலி வீதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், கடந்த ஆறுவருடங்களுக்கு முன்பு கேணி நகரில் காணியொன்றை கொள்முதல் செய்துள்ளார்.
இக் காணியை துப்பரவு செய்யும் பணியினை வாரந்தோறும், வெள்ளிக்கிழமைகளில் தாயும் மகனுமாக சென்று செய்துவருவது வழக்கம்.
சென்ற 01-11-2019 வெள்ளியன்று,
காணியை துப்பரவு செய்வதோடு, பயிர்களும் சில நடவேண்டியிருப்பதால் மகன் மட்டும் கேணிநகருக்கு செல்ல வெளியாகி,
இரண்டு நாட்கள் கழித்தே ஊர்வருவேன் என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு வெளியாகிச் சென்றிருக்கிறார்.
கேணிநகரில் இவர்களது காணிக்குள். இரவில் தங்கியிருப்பதற்காக தகரத்திலாலான குடிசையொன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
.இந்த நிலையில் 03/11/2019 ஞாயிறன்று இரவு 10.30 மணியளவில், கேணிநகரிலிருந்து, பெரிய நீலாவனையிலுள்ள தாய்க்கு ஒரு Call சென்றிருக்கிறது.
"அவசரமாக கேணிநகருக்கு வந்து உங்க மகனை காப்பாத்துங்க உம்மா " என ஒரு வயோதிபர் பதட்டத்துடன் சொன்னதும்,
அங்கிருந்து முச்சக்கரவண்டியொன்றை எடுத்துக்கொண்டு தாயும், மூத்தம்மாவுமாக அதிகாலை 01.00 மணியளவில் (04/11) கேணிநகருக்கு வந்த போது,
மகனை வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுபோயிருக்கிறார்கள், அங்கேபோங்க என்றதும்,
கேணிநகரிலிருந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு தாயார் சென்றபோது,

எரிகாயங்களுடன் மகனின் சடலத்தைத்தான் அடையாளம் காண முடிந்தது.
தனது மகனுக்கு என்ன நடந்தது என விசாரித்த போது,
சம்பவத்தை நேரடியாக கண்டதாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அக் கிராம நபர் ஒருவர் தெரிவிக்கையில்,
ஞாயிறு இரவு 09.30 மணியளவில் உங்க மகன், கேணிநகரிலுள்ள வயோதிபர் ஒருவரின் வீட்டோடு இருக்கிற கடையில் TV பார்த்துக்கொண்டிருக்கும் போது,
அக்கிராமத்திலுள்ள ஒருவன் (M) அங்குவந்து உங்க மகனுக்கு கண்ணத்தில் அறைந்துவிட்டு தாக்கத்தொடங்கினான்.
அதனை தடுக்க சென்ற வயோதிபரையும் தாக்கினான்.

நானும் இவர்களை தடுத்து இருவரையும் அவர்அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைத்தேன்.
அதன் பிறகு உங்க மகன் வீட்டுக்கு சென்று கதவை தாழ்ப்பாழிட்டு நித்திரைக்கு ஆயத்தமான வேளை,
மீண்டும் அவன் (M) உங்க மகனைத் தேடிச்சென்று குடிசை தகரங்களை களட்டி வீசிவிட்டு உள்ளே சென்று சரமாரியாக பொல்லுகளைக்கொண்டு தாக்கிக் கொண்டிருப்பதை கண்டேன்.

இதனை அவதானித்த நாங்கள் மீண்டும் ஓடிச்சென்று அவனை தடுத்து வெளியேற்றி விட்டு
உங்க மகனை அவதானித்தபோது நடப்பதற்கே கஷ்டமான நிலையில் தலையிலேற்பட்ட வீக்கத்தை காட்டி வாசலில் அழுது கொண்டிருக்க, சித்தாலேப எடுத்து அவரது தலையில் நானே தேய்த்துவிட்டேன்.

அதன்பின்னர் தள்ளாடிய நிலையில் குடிசைக்குள் சென்ற உங்க மகனின் கால்களினால் குடிசைக்குள் தரையில் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கு தட்டுப்பட்டு விழ, சடுதியாக இவரது சாறனில் தீ பரவி உடல் முழுவதும் எரியத் தொடங்கியதால் வாசலுக்கு ஓடிவந்த இவர், மலசல கூடத்துக்கு புதிதாக வெட்டப்பட்ட தண்ணீர் உள்ள குழிக்குள் விழுந்து விட்டார்.
அதன் பின்னர் 1990 இலக்க அம்பியுலன்ஸை வரவழைத்து வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துவிட்டார்.
அருகிலுள்ள காணியிலிருந்து தென்னம் பிள்ளையை களவாடிச் சென்றவன் யாரென்று காணி உரிமையாளரிடம் உங்க மகன் சொல்ல,
காணி உரிமையாளர் அவனை தேடிச்சென்று விடயத்தை கேட்க, அதில் கோபமடைந்துதான் அவன் உங்க மகனை தேடிவந்து,
ஏன்டா எனனை கள்ளனென்றாட சொல்லிக்கொடுத்த என்று கேட்டே தாக்கியிருக்கிறான்.

இவ்வளவுதான் எனக்கு தெரிந்தது என்றார்.
மகனை தாக்கியவன் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் தகவல்.
வாழைச்சேனை நீதிமன்ற கௌரவ நீதிபதியின் பணிப்பில், வாழைச்சேனை பொலிசாருடன் சம்பவ இடத்தை பார்வையிட்ட மரண விசாரனை அதிகாரி MSM நஸீர், வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

இன்று (05/11)சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோனை மேற்கொள்ளப்பட்டபோது, மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாததால், உடற்கூற்று மாதிரிகள் இரசாயனப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
இவரது மரணம் தீயினால் ஏற்பட்டதா? அல்லது நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதா? அல்லது அடி காயங்களால் ஏற்பட்டதா? என அறிய இரசாயனப்பகுப்பாய்வின் பின்னரே தீர்மானிக்க முடியும்.

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post