இளவாலை வருத்த படாத வாலிபர் சங்கத்தின் 'உயர்த்தும் கரங்கள்' செயற்குழுவினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!!

இளவாலை வருத்த படாத வாலிபர் சங்கத்தின்'உயர்த்தும் கரங்கள்' செயற்குழுவினால் 2020-புதிய கல்வியாண்டிற்கு முன்னதாக வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் பொருளாதார நலிவான குடும்பங்களை சேர்ந்த 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் (25) டிசம்பர் 31ம் திகதி வரை முன்னெடுக்கபடவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் யாழ்-மாவிட்டபுரம் தெற்கு அ.மி.த.க பாடசாலையைச் சேர்ந்த 14 மாணவர்களுக்கு, பாடசாலை கற்றல் உபகரணங்கள், புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ச்சியாக வடக்கு கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களிலும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கபட இருப்பதனால் இச்செயற்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் பணமாகவோ, பொருட்களாகவோ தங்கள் பங்களிப்பை வழங்கமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.