முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் பயணித்த வாகனம் மீது கல்லெறி!!

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீன் பயணித்த வாகனம் மீது புத்தளம் பகுதியில் வைத்து இனவாதிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் றிஷாட் உயிர் தப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவவியும் பயணித்தார். புத்தளம், முந்தல் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

புத்தளம் முந்தல், கனமூல பகுதியில் மக்கள் சந்திப்பை நடத்திவிட்டு இன்று மாலை திரும்பியபோது அவர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முந்தல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post