பூஜை வேண்­டிய நபரை மணப் பெண் போன்ற பொம்­மைக்­கு­ ந­கை­களை அணி­யச்செய்து குழிக்குள் இறக்கிக் கொலை; போலி பூசகர் கைது!! 

குளி­யாப்­பிட்டி, மட­கும்­பு­று­முல்ல பிர­தே­சத்தில் மர்­ம­மான முறையில் கொலை செய்­யப்­பட்டு தனது தென்­னந்­தோப்பில் புதைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் ஒரு­வரின் மரணம் தொடர்பில் போலி மந்­தி­ர­வாதி ஒருவர், குளி­யாப்­பிட்­டிய பொலிஸ் குற்றப் பிரி­வி­னரால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.

வெலி­பென்­ன­க­ஹ­முல்ல பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வரே கைது­செய்யப்பட்டுள்ளார். இந்­நபர் உயி­ரி­ழந்த நபரின் தென்­னந்­தோப்பின் பணியாளரெனவும் உயி­ரி­ழந்த மேற்­படி நபரின் விசு­வா­சி­யா­கவும் இருந்­து­வந்துள்ளதாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.


சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த நபர் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யாற்­றிய 45 வய­தான ஒரு­வ­ராவார்.

உயி­ரி­ழந்த நபர் அதி­க­ளவில் மூட­நம்­பிக்கை கொண்­டவர் எனவும், அதனால் அவ­ருக்­கான திரு­மண வாய்ப்­பு­களும் கைந­ழுவிச் சென்­றுள்­ள­தா­கவும் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லையில், ஹொர­தே­பொல விஹா­ரையின் விஹா­ரா­தி­பதி சில காலங்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும், அவ­ரது மர­ணத்தின் பின்னர் அவரின் ஆன்மா தனது உட­லுக்குள் புகுந்­துள்­ள­தா­கவும் கூறி தனது எஜ­மா­னனை (உயி­ரி­ழந்த நபரை) குறித்த சந்­தே­க­நபர் ஏமாற்­றி­வந்­துள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

உயி­ரி­ழந்த விரி­வு­ரை­யா­ளரின் தாயார், தனது மகன் வீட்­டி­லி­ருந்து காணாமல் போயுள்­ள­தாக கடந்த வாரம் குளி­யாப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்­நி­லையில், பொலிஸ் குழு­வினர் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து, கடந்த 6 ஆம் திகதி குறித்த நபர் தென்­னந்­தோப்பில் புதைப்­பட்­டி­ருந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

அத­னை­ய­டுத்து குற்ற விசா­ர­ணைப்­பி­ரிவு மற்றும் பிராந்­திய குற்­றத்­த­டுப்புப் பிரி­வினர் ஆகியோர் இணைந்து மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் மூலம் சந்­தேக நபரை இன ங்கண்டு நேற்­று­முன்­தினம் கைது­செய்­துள்­ளனர்.
மேற்­படி விரி­வு­ரை­யா­ள­ருக்கு திரு­மணம் கைகூட பரி­காரப் பூஜை மேற்­கொள்ள வேண்டும் எனக் கூறி, நூறு ரூபாவை விட பெறு­மதி குறைந்த சுரை ஒன்றை 40 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யா­னது எனத் தெரி­வித்து, அவ­ருக்கு அணி­வித்­துள்­ள­தாக சந்­தே­க­நபர் வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ளார்.

பூஜையை மேற்­கொள்ள வேண்­டு­மென சந்­தேக நப­ரான போலி மந்­தி­ர­வாதி கேட்டுக் கொண்­ட­தற்கு இணங்க, உயி­ரி­ழந்த மேற்­படி நபர் தனது தென்­னந்­தோப்பில் பாரி­ய­ள­வி­லான மூன்று குழி­களை வெட்டி தயா­ராக வைத்­துள்ளார்.

இந்­நி­லையில், வீட்­டா­ருக்கு தெரி­யாமல் கொண்டு வந்த நகை­களை மணப் பெண்ணைப் போன்று அலங்­க­ரிக்­கப்­பட்ட பொம்­மைக்கு அணி­வித்து, குழி ஒன்­றுக்கு இறங்­கு­மாறு விரி­வு­ரை­யா­ளரை சந்­தேக நபர் கட்­ட­ளை­யிட்­டுள்ளார்.

அதன்­பின்னர், மந்­தி­ர­வா­தியின் கட்­ட­ளைக்கு ஏற்ப குறித்த நபர் குழிக்குள் விளக்­கொன்றை ஏற்­று­வ­தற்கு முற்­பட்­ட­வே­ளையில், அவரை இரும்புக் குழாய் ஒன்­றினால் தொடர்ச்­சி­யாகத் தாக்­கி­ய­துடன், பின்னர் மண்­ணினால் மூடி­விட்டு தங்க நகை­களை எடுத்துக் கொண்டு தலை­ம­றை­வா­ன­தாக சந்­தே­க­நபர் வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­துள்­ள­தாக பொலிஸார் கூறி­யுள்­ளனர்.

முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றை வாங்­கு­வ­தற்­காக தான் இந்தக் கொலை மற்றும் கொள்­ளையை மேற்­கொண்­டுள்­ள­தாக சந்­தே­க­நபர் தெரி­வித்­துள்ளார். சந்­தே­க­ந­பரால் எடுத்துச் செல்­லப்­பட்ட 6 பவுண் தங்க நகைகள், நீர்­கொ­ழும்­பி­லுள்ள வங்கி ஒன்றில் 4 இலட்சம் ரூபா­வுக்கு அடகு வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவ்­வாறே கொலைக்­காக பயன்­ப­டுத்­திய இரும்புக் குழாய் மண்­வெட்டி ஆகி­ய­வற்றை பிபி­லா­தெ­னிய பிர­தே­சத்­தி­லுள்ள பாலம் ஒன்­றுக்கு அருகில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் சந்­தேக நபரின் வாக்­கு­மூ­லத்­துக்­க­மைய பொலிஸார் மீட்­டுள்­ளனர். சந்­தே­க­ந­பரை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில், வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முண­சிங்க, குரு­ணாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் புத்திக சிறிவர்தன ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் குளியாப்பிட்டி வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன கமகே ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சதுரங்க, குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரி சோதகர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன் னெடுத்திருந்த நிலையில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post