சஜித் அவர்களின் வெற்றி சாத்தியமாகாது என்பதால் பல பிரச்சார கூட்டங்களை தெரிந்தே தவிர்த்தேன்-அனுஷா.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் எனது கணிப்பின் படி இலங்கையின் ஜனாதிபதியாக அதிமேதகு கௌரவ கோட்டபாய அவர்கள் தெரிவு செய்யப்படுவார் என்பதில் உறுதியாக இருந்தேன். 

இருப்பினும் கட்சி உயர்மட்ட மற்றும் கூட்டமைப்பின் முடிவிற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இருந்ததுடன் எனது தந்தையினதும் எனதும் ஆதரவாளர்களின் மறுக்கமுடியாத கோரிக்கையின் அடிப்படையிலேயே ஓரிரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டேனே தவிர எனது சமூகத்தின் மீதான எனது தொலை நோக்கு பார்வையில் தெளிவாக இருந்தேன். நுவரெலியா மாவட்ட உறவுகள் அனைவரும் வாக்களித்தால் கூட கௌரவ சஜித் அவர்களின் வெற்றி சாத்தியமாகாது என்பதால் பல பிரச்சார கூட்டங்களை தெரிந்தே தவிர்த்தேன் .

இந்த முடிவு சிறுபான்மை மக்களுக்கு நன்மையா தீமையா என்பதை விட எனது கணிப்பு சரியாக அமைந்ததில் எனக்கு நானே வைத்த பலபரீட்சையில் வெற்றியடைந்தேன் என்பதில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் பெற்றிருக்கிறேன்.

எனது முகநூல் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் ஜனநாயக முறையில் இலங்கையின் 7வது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி அதிமேதகு கௌரவ கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்கட்கு வாழ்த்து தெரிவித்தனே தவிர கட்சி தாவல்களோ பதவிக்காக பச்சோந்தியாக மாறுவதோ எனது நோக்கமல்ல. விமர்சனங்கள் எனக்கு புதிதுமல்லஇ நான் விமர்சனங்களுக்கு அஞ்சுபவளும் அல்ல.

எம் மக்களுக்காக அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யாததால் அரசாங்கத்தை விட்டு அமைச்சு பதவியை துறந்தவர் எனது தந்தை சந்திரசேகரன் . அவருடைய மகள் அதே வீர ரத்தம் என் உடலிலும் ஓடிக் கொண்டிருப்பதால் எம் மக்களுக்காக சேவைகளை செய்வதற்காக அன்றி நான் ஏனையவர்களை போல் சோரம் போக மாட்டேன். சந்திரசேகரன் என்ற விருட்சத்தின் விதை நான் விருட்சமாகாமால் ஓயமாட்டேன்.

நான் அரசியலில் தலைவராக போற்றுவது என் தந்தையை , ஒரு தொண்டனாக எனது தலைவருக்கும் மகளாக எனது தந்தைக்கும் எம் சமூகத்தின் வளர்ச்சிக்கு உரமாகுவதன் மூலம் பெறும் அன்பை பரிசளிப்பேன் எனவும்

எனக்கான சந்தர்ப்பத்தை நான் எம் மக்களுக்காக சரியான முறையில் பயன்படுத்தி மலையக அரசியலில் தவிர்க்க முடியாத தடம் பதிப்பேன்.

எனது குரல் என் சமூகத்துக்காக என்றும் ஓங்கி ஒலிக்கும் எனவும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post