புகையிரத பயணங்களின் நேரம் மாற்றம்.

வடக்கு மற்றும் கரையோர ரயில் சேவைகள் சிலவற்றில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் பயண நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் நோக்கிப் பயணிக்கும் தபால் ரயில் மாலை 6.00 மணிக்கு காங்கேசந்துறையிலிருந்து புறப்படவுள்ளது. குறித்த ரயில் மீண்டும் கொழும்பு, கோட்டையிலிருந்து இரவு 9.00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிப் பயணிக்கும் கடுகதி ரயில், புதிய நேர அட்டவணையின்படி பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து காலை 6.15 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும்.

அந்த ரயில் மாலை 3.00 மணிக்கு மீண்டும் மருதானை ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளது.

மேலும், பிற்பகல் 2.15 மணிக்கு பெலியத்தவிலிருந்து மருதானை வரை பயணிக்கும் காலி குமாரி ரயிலானது, மீண்டும் பிற்பகல் 1.35 மணிக்கு புறப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post