யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் நாவலர் விழா.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணன் தனியார் நிறுவனமும் இணைந்து நடத்தும் ஆறுமுகநாவலர் விழா எதிர்வரும் 30.11.2019 சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 12.30 மணி வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நடைபெறவுள்ளது.
.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கு நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலை வகிப்பார்.


யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளர் ச.முகுந்தன் சிறப்புரை ஆற்றுவார். தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் இளைய தலைமுறைப் பேச்சாளர்கள் பங்கு பற்றும் பட்டிமண்டபம் நடைபெறவுள்ளது.

இதே வேளை நாவலர் விழாவையொட்டி பாடசாலை மாணவர்களிடையே வினாடிவினாப் போட்டியும் நடைபெறும். இதற்கான பரிசுகளை விழாவின் போது தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வழங்கி மதிப்பளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post