நள்ளிரவுக்கு முதலாவது முடிவுகள் வெளியிடப்படுமாம்!!

எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில் முதலாவது தபால் மூல தேர்தல் முடிவு இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் இறுதி தேர்தல் முடிவு திங்கட்கிழமை நண் பகலாகும்போதே வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

தேர்தல் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை தினத்துக்குள் வெளியிட முயற்சிப்பதாக ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. எனினும் இம்முறை வாக்குகளை எண்ணுவதற்கான கால நேரம் அதிகம் தேவைப்படுவதால் முழு முடிவுகளையும் ஞாயிற்றுக்கிழமை வெளியிட முடியாமல் போகலாம் என்றும் திங்கட்கிழமையாகும்போது இறுதி முடிவை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் மாவட்ட அடிப்படையில் வெளியிடப்படும். இன்று ஏழு மணியாகும்போது தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகும். அதன்படி இன்று நள்ளிரவாகும்போது முதலாவது தபால் மூல தேர்தல் முடிவு வெ ளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post