எதிர்க்கட்சித் தலைவராக சஜித் - ஐதேக தலைமை இணக்கம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவையும் சந்தித்த ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் இந்த இணக்கத்தை எட்டியுள்ளனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியைத் துறந்த சஜித் பிரேமதாச, கட்சியுடனான தொடர்புகளற்று இருந்தார்.

எனினும் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சபாநாயகரிடம் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவுடனும் சஜித் பிரேமதாசவுடனும் பங்காளிக் கட்சித் தலைவர்களான மனோ கணேசன், ரவூக் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் உள்ளிட்டோர் முன்னெடுத்திருந்தனர்.

இந்த முயற்சியின் பயணமாக எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post