ரெஹானா பாத்திமா சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு வழங்க பொலிஸார் மறுப்பு!! 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு பாதுகாப்புக் கோரி கேரள பொலிஸாருக்கு சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா கடிதம் எழுதியுள்ளார்.


ஆனால், ரெஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு தர முடியாது என்று கேரள மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என இந்தய உச்சநீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கிய பின்னர், முதலில் செல்ல முயன்ற பெண்களில் ஒருவர் ரெஹானா பாத்திமா (32). 

கேராளவின் கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமாகவும் ஹைதாபாத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான கவிதா ஜெக்காலாவும் கடந்த வருடம் சபரிமலை சென்றபோது அங்கு ஐயப்ப பக்தர்களால் தடுத்து அனுப்பப்பட்டனர்.


இதையும் மீறி இப்பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ரெஹானா பாத்திமாவுக்கு பொலிஸ் உடை அணிவித்து ஐ.ஜி. தலைமையிலான பாதுகாப்போடு பம்பாவில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டனர்.

பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர்.கடந்த வருடம் ரெஹானா பாத்திமா சபரிமலைக்குச் சென்ற போது..
இதனையடுத்து பொலிஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர்.


இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப பொலிஸாரு;ககு உத்தரவிட்டது.


இதனையடுத்து ரெஹானா பாத்திமாவும், உடன் கவிதாவையும் பொலிஸார் திருப்பி அனுப்பினர்.

பின்னர், பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவொன்று தொடர்பாக, ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தினார் என்ற குற்ச்சாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ரெஹானா பாத்திமா கைது செய்யப்பட்hடர்.

இந்நிலையில் இவ்வருடமும் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்கு தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேரள பொலிஸாருக்கு கடந்த சனிக்கிழமை மனு அனுப்பியுள்ளார் ரெஹானா பாத்திமா.

ஆனால் ரெஹானா பாத்திமாவுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்க முடியாது என கேரளா பொலிஸார் இன்று திங்கட்கிழமை மறுத்துள்ளனர்.


மறுத்துள்ளது. இது குறித்து பேசிய கேரள மாநிலக் காவல்துறையின் முக்கிய அதிகாரியான ஒருவர்பெண்ணியவாதிகளுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் சபரிமலையில் இடமில்லை.

சபரிமலை ஐயப்பன் கோவில் புரட்சி செய்வதற்கான இடமில்லை என மாநில அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post