யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்து மக்கள் செயற்பட வேண்டும்-மாவை.

திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள்,

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினருடனும் பேசியதாகவும் ஆனால் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அவர்கள் வாய்திறக்கவில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இருப்பினும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகார பகிர்வை மேற்கொண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும்

இவ்வாறு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பதற்கு சஜித் பிரேமதாச முன்வந்திருப்பதன் அதனடிப்படையிலேயே அவருக்கு ஆதரவு வழங்குவதாக முடிவு செய்தோம் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதே வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது பாரிய குற்றங்களை இனப்படுகொலை செய்தவர்கள், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள தற்போது கூட்டாக நிற்பதாக தெரிவித்த மாவை சேனாதிராஜா, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்து மக்கள் செயற்பட வேண்டும் என கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post