மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு!!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 13ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தென்மராட்சியில் நேற்றையதினம் நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வாரிவனேஸ்வரர் சிவன் கோயிலின் பிரதம குரு கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் 'ரவிராஜ்' நினைவாக ஆத்மா சாந்தியுரையையும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் 'போரின் முடிவும் போராட்டத் தொடர்ச்சியும்' என்ற தலைப்பில் நினைவுப் பேருரையையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறப்புரையையும் ஆற்றினார்கள். இதன்போது ரவிராஜ் நினைவு விருது வழங்கலும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, க.துரைரெட்ணசிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
No comments

Powered by Blogger.