மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு; பதற்றத்தில் மக்கள்!!


இன்று ஞாயிறுக்கிழமை (17.11.2019) மாலை இருதயபுரம் மேற்கு 11ஆம் குறுக்கு பகுதியில் கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு பகுதியில் கைக்குண்டொன்றை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த இடத்திலிருந்து கைக்குண்டை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இச் சம்பவத்தினால் குறித்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


No comments

Powered by Blogger.