மக்களின் ஆணையினை ஏற்று அதற்கு தலை சாய்க்கிறேன்;சஜித் பிரேமதாச!!

மக்கள் வழங்கிய ஆணைக்கு தலைசாய்ப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார். நாட்டில் அமைதியான நிலையை பேண நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. ஆணைக்குழு தலைவரின் உத்தியோகபூர்வ அறிவிப்பையடுத்து இங்கு கருத்துத்

தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு தலைசாய்க்கிறேன். 7ஆவது ஜனாதிபதியாக தெரிவான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரத்தையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுகிறேன்.

சாதகமான சூழலையும் அமைதியையும் பேண நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post