ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஈழமக்கள்ஜனநாயகக்கட்சியின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்றையதினம்(11.10.2019) மாலை 03 மணியளவில் வட்டு வடக்கு இளைய நட்சத்திர விளையாட்டுக் கழக அரங்கில் நடைபெறவுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிவகுரு பாலகிருஸ்ணன் (தோழர் ஜீவன்) தலைமையில் நடைபெறும் இந் நிகழ்விற்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியினுடைய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post