தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புதன்கிழமை(13.11.2019) மாபெரும் பரப்புரைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பிற்பகல் 3 மணிக்கு யாழ். முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இந்தப் பரப்புரைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். அத்துடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறப்புரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post