நிந்தவூர் பிரதேச விவசாய அமைப்புகளின் பிரதிநிகளுடன் பைசல் காசிம் கலந்துரையாடல்.

நிந்தவூர் பிரதேச விவசாயிகளின் நீர்பாசன பிரச்சினைகள் தொடர்பாக விவசாய அமைப்புகளின் பிரதிநிகளுக்கான விசேட கலந்துரையாடல் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தலைமையில் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கல்முனை பிரதேச நீர்பாசன பொறியிலாளர் ஆர்.ராஜ்குமார், சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பொறியிலாளர் எம்.எச்.எம்.நவாஸ், நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக், ஒய்வு பெற்ற நீர்பாசன பொறியிலாளர் யூ.எல்.எம்.அஸீஸ், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.எம்.அன்சார், நீர்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள்இ விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விவசாயிகள் நீர்பாசனம் தொடர்பாக எதிர்நோக்கம் பிரச்சினைகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிகளினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.0/Post a Comment/Comments

Previous Post Next Post