கிழக்கு ஊடக அமையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது!!


இன்றைய தினம் 07/11/2019 வியாழக்கிழமை கிழக்கு ஊடக அமையத்திற்கான தலைமை அலுவலகம் ஊடக அமையத்தின் உறுப்பினர்களால் நாவற்குடா மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கட்டிடத்தில் பாராம்பரிய கலாச்சார முறைகளோடு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த ஊடக நலன்விரும்பிகளுக்கு கிழக்கு ஊடக அமையத்தின் இணை நிறுவனங்களான தமிழ் ஓசை பத்திரிகை, மாருதம் இணையத்தளம், சமூக சேவை அமைப்பான மீன்பாடும் தேனரங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயன்தரு மரங்கள் நடுகைக்காக அன்பளிப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்தும் "மரங்களை பேணுவோம் இயற்கையினை காப்போம்" எனும் தொனிப்பொருளுடன் முதற்கட்டமாக 1000 பயன்தரு மரக்கன்றுகள் வழங்கும் செயற்பாடும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதோடு கல்வி,கலை,கலாச்சாரம் உள்ளடங்கிய குறிக்கோளுடன் "வாய்மையே வெல்லும்" எனும் தாரக மந்திரத்துடன்  ஊடக செயற்பாடுகள் இளம் ஊடகவியலாளர்களினால் கிழக்கு ஊடக அமையத்தின் சமூக பணிகள் விசாலமாக்கப்படவுள்ளன.

எனவே இந்த தார்மீக கொள்கை கொண்ட ஊடகதர்மத்தினை கடைப்பிடித்து அதனை செயலிலும் நடைமுறைப்படுத்த துடித்திடும் இளம் ஊடக செல்வங்கள் இவ் அமையத்தினோடு இணைந்து பயணித்திடவும் அழைப்பு விடுக்கப்படுவதோடு எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்திடும் இந்த ஊடகப் பணிக்கு அனைத்து நலன் விரும்பிகளும் உரம் சேர்ப்பார்கள் எனும் உயர் நம்பிக்கையோடு எழுச்சி கொள்கிறது கிழக்கு ஊடக அமையம்.

உங்களது கருத்துக்களை மக்களிடம் உங்கள் குரலினை உங்கள் வாய் மூலம் உரைத்திட நமது ஊடக அமையத்தினோடு தொடர்பினை பேணுங்கள் மேலதிக விபரங்களுக்கு ஊடக அமையத்தின் முக நூல்பக்கத்தின் உள் பெட்டியோடு தொடர்பு கொண்டு உரையாடி தகவல்களினை பெற்றுக் கொள்ளுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post