மலிக், அஜித் பி பெரேரா, மங்கள, ஹரின், கபீர், ருவன் இராஜினாமாவும்;அரசியலின் அடுத்த கட்ட நகர்வும்?

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அரச அதிகாரத்தை எவ்வாறு கையளிப்பது மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடவுள்ளனர்.

அத்துடன், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுவும் கூடி அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீர்மானிக்கவுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோகணேசன்,

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள, "புதிய பாராளுமன்ற தேர்தல்" ஒன்றுக்குச் செல்வதென முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் இன்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் ஆராய்ந்து முடிவு செய்யப்படவுள்ளது.

தொடர்ந்த அரசாங்கமாக இழு பறி படாமல் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, உடன் தேர்தலுக்கு சென்று தேர்தலை சந்திக்க பெரும்பாலான கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் இணங்கினர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.தே.கவின் பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் பிரேமதாச இராஜனாமா செய்துள்ளதுடன், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, அஜித் பி பெரேரா, மங்கள சமரவீர, ஹரின் பெர்ணான்டோ, கபீர் ஹாசீம், ருவான் விஜேவர்தன ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

No comments

Powered by Blogger.