இரும்பு கடத்த முயன்ற இரு இளைஞர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுக அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் கைது!! 

ஹம்­பாந்­தோட்­டையில் இரும்பு கடத்த முயற்­சித்த இளை­ஞர்கள் இருவர் கடற்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.


ஹம்­பாந்­தோட்டை – துறை­முக அதி­வேக நெடுஞ்­சா­லையின் நுழை­வா­யிலில் கடந்த புதன்­கி­ழமை கடற்­ப­டை­யினர் மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்­கை­களின் போதே சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக கடற்­படை ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­தது.

சந்­தே­கத்­துக்­கி­ட­மான சிறிய ரக லொறி ஒன்­றையும் மோட்டார் சைக்கிள் ஒன்­றையும் அவ­தா­னித்­துள்ள கடற்­ப­டை­யினர் அதனை சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த லொறி­யி­லி­ருந்து 55 கிலோ கிராம் இரும்­புகள் மீட்­கப்­பட்­டுள்­ளன. பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்­டு­ன­ரையும், லொறியின் சார­தி­யையும் கைது செய்­த­தாக கடற்­ப­டை­யினர் தெரி­வித்­தனர்.

ஹம்­பாந்­தோட்டை பகு­தியைச் சேர்ந்த 20,27 ஆகிய வய­து­டைய இளை­ஞர்கள் இரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை அம்­பாந்­தோட்டை பொலிஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post