ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!!!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது. 

அந்த வகையில் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்களிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். 

ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


அத்துடன், வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக நாடாளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post