யாழில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்.

யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக கல்வெட்டுக்கள் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் இன்று 27ஆம் திகதி இரவு வரையில் இந்த கல்வெட்டுக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாவீரர் வாரத்தின் இறுதிநாளான இன்று 27ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




No comments

Powered by Blogger.