பதவிக்காக பச்சோந்தியாக மாறுவது எனது நோக்கமல்ல-அனுஷா



“மலையக அரசியலில் தவிர்க்க முடியாத தடம் பதிப்பேன். எனது குரல் என் சமூகத்துக்காக என்றும் ஓங்கி ஒலிக்கும்.” என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்து பதிவு வருமாறு,

” எனது முகநூல் வாயிலாகவும் தொலைப்பேசி வாயிலாகவும் ஜனநாயக முறையில் இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்து தெரிவித்தனே தவிர கட்சி தாவல்களோ பதவிக்காக பச்சோந்தியாக மாறுவதோ எனது நோக்கமல்ல.

எம் மக்களுக்காக அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யாததால் அரசாங்கத்தை விட்டு அமைச்சு பதவியை துறந்தவர் எனது தந்தை சந்திரசேகரன் . அவருடைய மகள் அதே வீர ரத்தம் என் உடலிலும் ஓடிக் கொண்டிருப்பதால் எம் மக்களுக்காக சேவைகளை செய்வதற்காக அன்றி நான் ஏனையவர்களை போல் சோரம் போக மாட்டேன். சந்திரசேகரன் என்ற விருட்சத்தின் விதை நான் விருட்சமாகாமால் ஓயமாட்டேன்.

நான் அரசியலில் தலைவராக போற்றுவது என் தந்தையை , ஒரு தொண்டனாக எனது தலைவருக்கும் மகளாக எனது தந்தைக்கும் எம் சமூகத்தின் வளர்ச்சிக்கு உரமாகுவதன் மூலம் பெறும் அன்பை பரிசளிப்பேன் . .

எனக்கான சந்தர்ப்பத்தை நான் எம் மக்களுக்காக சரியான முறையில் பயன்படுத்தி மலையக அரசியலில் தவிர்க்க முடியாத தடம் பதிப்பேன். அதற்காக அனைவரும் என்னுடன் ஒத்துழைத்து செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது நகர்வுகளை முன்னெடுக்கிறேன்.

எனது குரல் என் சமூகத்துக்காக என்றும் ஓங்கி ஒலிக்கும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.