அதிகஷ்ட்ட பிரதேசங்களில் இலவச கல்விக்கருத்தரங்கு!!

கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து அதிகஷ்ட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்கு இலவச மாதிரி வினாவிடை கருத்தரங்குகளை 22.11.2019 அன்று செய்து நிறைவேற்றியிருந்தனர். மிகவும் கஷ்டத்தில் தமது கல்வியை பின்தொடர முடியாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைவிடும் இந்த நிலையில் சாதாரண தர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பி அவர்களை ஊக்குவிக்குமுகமாக இச்செயற்திட்டம் பரீட்சாகரமாக இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தில் அவசியமான கணித பாடம் செயலமர்வில் கற்பிக்கப்பட்டது. இதனை பிரபல்யமான ந.விபுலாநந்த அவர்கள் நடாத்தினார். இதற்கான அனுசரணையினை திரு சு.சசிகுமார் அவர்கள் வழங்கிவைத்தார். இந்த செயலமர்வு திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் கரடியனாறு மகா வித்தியாலயத்திலும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தும்பங்கேணி, திக்கோடை, முனைத்தீவு, கரடியனாறு, உறுகாமம், கித்துள் ஆகிய இன்னும் பல அதிகஷ்ட பிரதேசங்களில் இருந்து  கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post