இத்தாலியில் 2ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிக்காத குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு!!

இத்­தா­லியின் மத்­திய டுறின் பிராந்­தி­யத்தில் இரண்டாம் உலகப் போர் காலக் குண்­டொன்று வெடிக்­காத நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து 10,000 க்கும் அதி­க­மானோர் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை வெளியேற்­றப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி சிவப்பு எச்­ச­ரிக்கை வல­ய­மாக பிர­க­டனம் செய்­யப்­பட்ட பிராந்­தி­யத்­தி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்­ட­வர்­க­ளுக்கு மேல­தி­க­மாக அந்த வல­யத்­திற்கு வெளியில் வசித்த மேலும் 50,000 பேருக்கு குண்டு செய­லி­ழ­க்க வைக்­கப்­படும் காலத்தில் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக வெளி யேற அன்றி வீடு­க­ளுக்குள் தங்­கி­யி­ருக்க அறி­வு­றுத்­தப்­பட்­டது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரித்­தா­னி­யாவால் போடப்­பட்ட அந்தக் குண்டு 65 கிலோ­கிராம் வெடி­பொ­ருளைக் கொண்­டி­ருதந்­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.


அந்தக் குண்டின் வால் பகு­தியில் பொருத்­தப்­பட்­டி­ருந்த வெடிக்க வைக்கும் உப­க­ர­ணத்தை செய­லி­ழக்க வைக்க வேண்­டி­யி­ருந்­த­தாக டுறின் நகர மேயர் சியரா அபென்­டினோ கூறினார்.

நிலை­மையை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திய திரு­டர்கள் மக்கள் வெளியேற்­றப்­பட்ட பிர­தே­சங்­களில் கொள்­ளை­யி­டு­வதைத் தடுக்க அந்தப் பிர­தே­சங்­களில் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த பெரு­ம­ளவு படை­யினர் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்.

இந்­நி­லையில் அந்தக் குண்டை செய­லி­ழக்க வைக்கும் நடவடிக்கை எதிர்பார்த் ததிலும் விரைவாக நிறைவுபெற்று பிரதேச வாசிகளுக்கு தத்தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post