ஜனாதிபதி அணியும் ஆடையிலும் சிக்கலா?!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அணியும் ஆடையில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகரின் அனுமதியுடன் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஆடை அணித்தால், ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதில் சிக்கல் இல்லை என, நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேசிய ஆடை அல்லது மேற்கத்திய முறையிலான ஆடையில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள முடியும்.

நாடாளுமன்ற வரலாற்றில் சில உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு சபாநாயகர்கள் அனுமதி வழங்கிய சம்பவங்களும் உள்ளன.

இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கமைய சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.