இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொடுத்த தமிழன் பாலுராஜ்!!

நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெறும் 13 வது தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகளின் முதல் நாளான நேற்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தின் கல்முனை சேனைக்குடிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

குறித்த கராத்தே போட்டியில் போட்டியில் நேபாளத்தைச் சேர்ந்த கஜி ஸ்ரேஸ்தா தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தானைச் சேர்ந்த நியாமதுல்லாஹ் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.

இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக தடம் பதித்துள்ளார். அத்தோடு கராத்தே போட்டிப் பிரிவுகளில் இலங்கை சார்பில் சென்றுள்ள 26 வீரர்களுள் பாலுராஜ் மட்டுமே தமிழ் பேசுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 2017ம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கராத்தே அணியில் இடம்பிடித்த ஒரேயொரு தமிழ் பேசும் வீரர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

பாலுராஜ் தனது சகோதரர் பொறியியலாளர் சிகான் எஸ்.முருகேந்திரன் அவர்களின் பயிற்றுவிப்பின் கீழ் 2012ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு வரை தேசிய கராத்தே போட்டியில் தொடச்சியாக 8 தங்கப்பதக்கங்களை தட்டிக்கொண்ட சாதனையாளர் என்பதுடன் 2014, 2016, 2017இல் தெற்காசிய சம்பியன்சிப் போட்டிகளிலும் பதக்கம் வென்றவர் என்பதுடன் 13 வது தெற்காசிய விழையாட்டு விழாவில் முதல் முறையாக பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது பாலுராஜின் சாதனைகளின் மற்றுமொரு வெற்றிப்படி என்பது குறிப்பிடத்தக்கது. 

- கே.கிலசன் -


0/Post a Comment/Comments

Previous Post Next Post