டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் யாழில் விசேட கலந்துரையாடல்.

டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலர் உயர்திரு. என். வேதநாயகன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.

இந் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும் இக் கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள்,பொலிஸார், சுகாதாரப் பிரிவினர், அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


 

0/Post a Comment/Comments

Previous Post Next Post