நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன்னிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆஜராக மாட்டார்!!

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ரிக்கும் அந்­நாட்டு நாடா­ளு­மன்ற விசா­ரணைக் குழுவின் முன்­னி­லையில் ஜனா­தி­பதி ட்ரம்ப் அல்­லது அவரின் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ராகப் போவ­தில்லை என வெள்ளை மாளிகை அறி­வித்­துள்­ளது.ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்

அமெ­ரிக்க முன்னாள் உப ஜனா­தி­ப­தியும், எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி சார்பில் போட்­டி­யி­டு­வ­தற்கு முயற்­சிப்­ப­வர்­களில் ஒரு­வ­ரு­மான ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சம்­பந்­தப்­பட்ட யுக்­ரை­னிய நிறு­வ­ன­மொன்றில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்­தும்­படி ஜோர்­டா­னிய ஜனா­தி­பதி வெலோ­டிமிர் ஸேலேன்ஸ்­கியை ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் வலி­யு­றுத்­தினார் எனக் கூறப்­ப­டு­கி­றது.

கடந்த ஜூலை மாதம் இடம்­பெற்ற தொலை­பேசி உரை­யா­ட­லின்­போது ஜனா­தி­பதி ட்ரம்ப் இவ்­வாறு வலி­யு­றுத்­தினார் எனக் கூறப்­ப­டு­கி­றது. இதனால், தனது தனிப்­பட்ட அர­சியல் நலன்­க­ளுக்­காக, தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்த முயற்­சித்­ததன் மூலம் அதி­கார துஷ்­பி­ர­யோகம் செய்­து­விட்டார் என டொனால்ட் டரம்ப் மீது குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.ஜெரி நெட்­லர்

ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் இக்­குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்து வரு­கிறார். இது தொடர்­பாக அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற குழு விசா­ரணை நடத்தி வரு­கி­றது. இவ்­வி­சா­ர­ணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், இவ்­வி­சா­ரணைக் குழுவின் முன்­னி­லையில் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அல்­லது அவரின் சட்­டத்­த­ரணி எவரும் ஆஜ­ராக மாட்­டார்கள் என வெள்ளை மாளிகை அறி­வித்­துள்­ளது. நாடா­ளு­மன்ற நீதியியல் குழுவின் தலைவர் ஜெரி நெட்­ல­ருக்கு எழு­திய கடி­த­மொன்றில், வெள்ளை மாளி­கையின் ஆலோ­சகர் பெட் சிபோலோன் இதைத் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், புல­னாய்­வுகள் மூலம் கண்­ட­றி­யப்­பட்ட ஆதா­ரங்கள், ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­புக்கு எதி­ராக தேசத்­து­ரோகம், லஞ்சம் அல்­லது வேறு பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டுகள் சுமத்தி குற்­ற­வியல் செயன்­மு­றை­களை மேற்­கொள்­வ­தற்குப் போது­மா­ன­வையா என ஆராய்­வ­தற்­காக நாடா­ளு­மன்ற விசா­ர­ணைக்­குழு நாளை புதன்கிழமை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post