கட்சியில் இருந்து நீக்கப்படும் ஏ.எச்.எம்.பௌசி!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்தையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று பார்வையிட சென்றிருந்த போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

கட்சியின் ஒழுக்காற்று விசாரணைகளை செய்வது தற்போது வாழ்வில் அன்றாக அங்கமாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில், ஏ.எச்.எம்.பௌசியை கட்சியில் இருந்து நீக்கும் கடிதத்தில் நான் கையெழுத்திட்டுள்ளேன். தேவையானால், அவர் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

இன்னும் ஒரு மாதத்தில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகும். ஏனையோருக்கும் இதேவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post