ராஜபக்ஷவினருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை; அதனால் வழக்குகளை முன்னெடுக்க இயலாது; எஸ்.பி.திஸாநாயக்க!!

கொலை, பயங்கரமான குற்றச் செயல், அடிப்படைவாத ஆதரவாளர்களை பாதுகாத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் றிசார்ட் பதியூதீனுக்கு கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எந்த அமைச்சருக்கும் இல்லாத 47 அரச நிறுவனங்கள் அவரது அமைச்சின் கீழ் இருந்தன என காணி மற்றும் காணி மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அன்று அப்படியான பொறுப்புகளை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் தற்போதைய அரசாங்கத்திற்கு அவ்வாறு செய்ய முடியாத வகையிலான மக்களின் ஆணை கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற எஸ்.பி.திஸாநாயக்க, கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அமைச்சரை தியவடன நிலமே பிரதீப் திலங்க தேலபண்டார வரவேற்றார்.

இதனையடுத்து மல்வத்து மஹா விகாரைக்கு சென்ற எஸ்.பி.திஸாநாயக்க மஹா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் மற்றும் கெட்டம்பே ராஜோபவனாராம விகாரதிபதி கெப்பட்டியாகொட சிறிவிமல தேரரை சந்தித்துள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள சிறிவிமல தேரர்,

சிறந்த தலைவர், தூரநோக்கம் கொண்ட தலைவர் நாட்டுக்கு கிடைத்துள்ளார். அந்த நோக்கதிலும் அறிவிலும் நாட்டுக்கு வேலைகளை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரும் அவரது நோக்கத்தில் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும். அப்போது வெளிநாட்டு சக்திகள் மற்றும் அடிப்படைவாதிகள் நாட்டுக்குள் புகுந்து எந்த வகையிலும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களை செய்ய சந்தர்ப்பம் ஏற்படாது எனக் கூறியுள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட ராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க,

கடந்த அரசாங்கம் ராஜபக்சவினருக்கு எதிராக நடத்திய வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தேவையான சாட்சியங்கள் மற்றும் தகவல்கள் எதுவுமில்லை. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஷானி அபேசேகர போன்றவர்களின் அழுத்தங்களின் அடிப்படையில் ராஜபக்சவினருக்கு எதிராக செயற்கையான வழக்குகள் தொடரப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post