தமிழக தலைவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் அன்பான வேண்டுகோள்....

ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கியும் அவ்வப்போது குரல் கொடுத்து வருவதையும் ஈழத் தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள். உங்களது ஆதரவு நொந்து போன எம் மக்களுக்கு ஓரளவு மன ஆறுதலை கொடுத்து சோர்ந்து விடாமல் உற்சாகப்படுத்தியது. 

2009 இறுதிப் போரின் போது எமக்காக முத்துக்குமார் உட்பட 18 பேர் தீக்குளித்து தங்களது உயிர்களை தியாகம் செய்தமை பல ஆயிரக்கணக்கில் மக்கள் ஆர்ப்பட்டங்களில் வீதியில் இறங்கியமை போன்ற அர்ப்பணிப்பை ஈழத்தமிழர்கள் எவரும் மறக்கமாட்டார்கள். 

அத்துடன் 2009 பின் வடகிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்வில் இந்திய மத்திய அரசாங்கம் செய்த உதவிகள் வீட்டு திட்டங்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை.

இவ்வாறான கடந்த கால செயற்பாட்டை முழுமையடையச் செய்ய போரில் அழிந்து போன ஈழத் தமிழரின் தாயக தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் அதிகாரத்தை ஈழமக்களிடம் பெற்றுக் கொடுக்கும்படி இந்திய மத்திய அரசிற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை தமிழக தலைவர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றாக வேண்டுகின்றனர்.

இந்திய மத்திய அரசாங்கம் குறிப்பாக பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் சிறிலங்கா ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷா அவர்களிடம் முக்கியத்துவப்படுத்தி எடுத்துக் கூறியதை கேட்டவுடன் வடகிழக்கு தமிழர்கள் யாவரும் மனச்சந்தோஷம் அடைந்தனர். 

அத்துடன் தங்களை இந்திய தேசம் கைவிடமாட்டாது என்ற ஆறுதலையும் நம்பிக்கையையும் அவர்களது உரையாடல்களில் உணர முடிகின்றது .ஆகவே பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் எண்ண வெளிப்பாட்டை செயல் வடிவமாக்க தமிழகத்தில் வாழுகின்ற எமது தொப்பிள் கொடி உறவுகளால் தான் முடியுமென ஈழத்தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். அவர்களாது நம்பிக்கையை தமிழக தலைவர்கள் அனைவரும் ஒன்றினைந்து ஈழத்தமிழர்களின் அழிந்து போன தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அரசியல் அதிகாரத்தை வழங்குங்கள் என ஒரே குரலாக மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்து நிரந்தர தீர்வைப் பெற ஒத்துழையுங்கள் ஈழத்தமிழர்கள் எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post