திறன் அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கான திட்டம் அமுல்.

Media Unit, - Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு

திறன் அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிகான திறன் அபிவிருத்தி செயத்திட்டனுடாக சுற்றுலாத்துறையினையும் கலை கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதற்கான திட்டம் அமுல் நடத்தப்படவுள்ளது.

அவுஸ்ரேலியா நாட்டு உதவியில் அமுல் நடத்தப்படவுள்ள இந்த விசேட திட்டம் பற்றி ஆராய்வு செய்யும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இன்று (06) நடைபெற்றது. 

இத்திறன் அபிவிருத்தி செயத்திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிகவும் முக்கியமான அபிவிருத்தி திட்டமாகும் 

இத்திட்டமானது சுற்றுலாத்துறையை வளர்க்கவும் மற்றும் சுற்றுலா தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டமாக அமுல்ப்படுத்தப்படவுள்ளது. 

இத்திட்டனுடாக சுற்றுலாத்துறையுடாக தொழில் வாய்ப்புக்கள் மற்றும் எமது நாட்டு கலை கலாச்சாரங்களை வளர்ச்சியடையச்செய்யவும் இளைஞர் யுவதிகளின் திறன் விருத்தி செய்யப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவும் நாட்டினுடைய வருமானம் உயர்வடையும் நிலை ஏற்படுமென மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் இங்கு கருத்து தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீகாந்த் , மாவட்ட பிரதம கணக்காளர் கே.ஜேகதீஸ்வரன் ,உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் புண்ணியமூர்த்தி சசிகலா ,சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் திணைக்கள தலைமை உத்தியோகத்தர் எஸ்.வினோத் , உள்வாங்கப்பட்ட திறன் அபிவிருத்தி செயத்திட்ட நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் ஜி.மெரினா,திட்டத்தின் ஆலோசகர் பேராசிரியர் சந்திராஸ்ரீ மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.