வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவுக்கு விஜயம்!!!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன  ஜனவரி 9ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் தங்கள் முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுவருவது ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகின்ற நிலையில் தினேஷ் குணவர்தன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடனேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.