கருச்சிதைவுக்கு பெண்களை குறைச்சொல்லாதீர்கள் – கஜோல்!!

கருச்சிதைவுக்கு பெண்களை குறைச்சொல்லாதீர்கள் என ஹிந்தி திரைப்படவுலகின் முன்னணி நடிகையான கஜோல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், “கபி குஷி கபி கம்” பட காலகட்டம். அப்போதுதான் எனக்கு முதல் கருச்சிதைவு ஏற்பட்டது. படம் நன்றாக வந்திருந்தாலும் எனக்கு அது மகிழ்ச்சியான தருணமாக அமையவில்லை. அடுத்து இன்னொரு முறையும் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட இம்முறை அதிகம் சிரமப்பட்டேன். தாங்கமுடியாத வலி. ஆனாலும் மீண்டு வந்தேன்.
Image result for கஜோல்
இப்போது என் கணவர் மற்றும் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கருச்சிதைவுக்கு ஆளானவர்களை நம் நாட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள். குடும்பத்தினரே அசிங்கப்படுத்தி அவர்களை அவமானமாக உணர வைக்கிறார்கள்.

இது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான். இதற்காக பெண்கள்மீது குற்றவுணர்வைச் சுமத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை கஜோல் மின்சார கனவு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்துகொண்டார். கஜோலுக்கு நைசா என்ற மகளும், யக் என்ற மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.