சமூகத்தில் விசேட தேவையுடையோர்களையும் சமமனிதர்களாக மதித்து நடக்க வேண்டும்; இரா.சாணக்கியன்!!

சமூகத்தில் விசேட தேவையுடையோர்களையும் சமமனிதர்களாக கருதி சமூகத்திலிருந்து ஒதுக்காமல் அவர்களையும் சம அந்தஸ்து கொடுத்து, எம்மில் ஒருவராக அவர்களையும் மதித்து நடக்க வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும், தமிழரசு கட்சியின் வாலிப முன்ணனியின் உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளை 'அன்பின் வீடு' விசேட தேவையுடையோர்களின் பாடசாலைக்கு சென்று அங்குள்ளவர்களுடன் உரையாடி அப்பாடசாலை மாணவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்...

இந்த குழந்தைகள் விசேட தேவையுடையோர்களாக பிறப்பினாலே உள்ளவர்கள். இவர்களின் தேவைகளை புதிய அரசானது எந்தவிதமான பேதமுமின்றி நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பாராமரிப்பு செலவினை அதிகரித்து கொடுக்க வேண்டும்.

ஏனைய விசேட தேவையுடையோர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும்,

எமது சமூகத்தில் விசேட தேவையுடையோர்களையும் சமமனிதர்களாக கருதி சமூகத்திலிருந்து ஒதுக்காமல் அவர்களையும் சம அந்தஸ்து கொடுத்து, எம்மில் ஒருவராக அவர்களையும் மதித்து நடக்க வேண்டும். ஏனென்றால், அண்மையில் நான் முல்லைத்தீவு மாங்குளம் உயிரழை எனும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் நிலையத்திற்கு சென்றிருந்தேன் அங்கே உள்ள நிர்வாகம் பாதிக்கப்பட்ட தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணின் கதையையும், சமூகத்தால் அல்ல தனது கணவனாலே தூக்கியெறியப்பட்ட மட்டக்களப்பு பெண்ணுடனும் உரையாட கிடைத்ததாலே இக்கருத்தை இங்கே பதிவு செய்கின்றேன் எனவே அனைவரும் எம் உறவுகளாக நினைத்து நடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்வின் போது பாடசாலை நிர்வாகிகளுக்கு பரிசும், மாணவர்களின் குடும்பங்களுக்கு நுளம்பு வலையும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.
No comments

Powered by Blogger.