கல்முனை வடக்கு தமிழ்ப்பிரதேசங்களில் தொடரும் திருட்டுச்சம்பவங்களால் மக்கள் அச்சம்!!

                                                                                                    - செ.துஜியந்தன் -
கல்முனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தமிழ்க்கிராமங்களில் சமீபகாலமாக தொடரும் திருட்டுச்சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருட்டுச்சம்பவங்களால் தமது உடமைகளைப்பறிகொடுத்தோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்துள்ளபோதிலும் இதுவரை திருட்டுச்சம்பவங்களோடு தொடர்பபட்டவர்கள் எவரும் கைது செய்யப்டவில்லை எனவும் பொலிஸார் திருடர்களை கைது செய்வதற்க்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்ட்டோர் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Image result for தொடரும் திருட்டு சம்பவங்களால்
கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துறைவந்தியமேடு, பெரியநீலாவணை, மணல்சேனை ஆகிய கிராமங்களில் பகல், இரவு வேளைகளில் பூட்டியிருக்கும் வீடுகள், கடைகளை உடைத்து உள்நுழையும் திருடர்கள் அங்குள்ள பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். இபபிரதேசங்களில் இதுவரை 12 திருட்டுச்சம்பவங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் 40 பவுணுக்கு மேற்பட்ட தங்கநகைகள் மற்றும் பெருமளவு பணம் என்பன பறிபோயுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டிருப்பில் சுரேஸ் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 20 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இதேவேளை பாண்டிருப்பிலுள்ள இரு கடைகள் உடைக்கப்பட்டு 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனையில் வீடொன்றில் 16 பவுண் நகையும் கல்முனை பாண்டிருப்பு எல்லைவீதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் 10 பவுண் நகையும், கிராமசேவகர் ஒரிவரின் வீட்டில் பணம் மற்றும் கல்முனை பிரதானவீதியில கடையொன்று உடைத்து ;4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

இவ் திருட்டுச்சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்ட்டவர்களினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இதுவரை திருடர்கள் கைது செய்யப்படவில்லலை என வசனம் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுச்சம்பவங்கள் கல்முனை பிரதேசத்திலள்ள தமிழ்க்கிராமங்களில் நடைபெற்றுவருகின்றன. பொலிஸார் சிவில் உடையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இவ்வாறான திருட்டுச்சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றனர்.

No comments

Powered by Blogger.