சங்கானையில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்!!! (படங்கள் இணைப்பு)

தைப்பொங்கல் பண்டிகை நாளையதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிளும் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந் நிலையில் தைப்பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் வலிகாமம் மேற்கில் முக்கிய சந்தைகளில் ஒன்றான சங்கானைப் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிளும் பொங்கல் பானைகள் மற்றும் பொங்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் செலுத்துவதை காணமுடிகின்றது.

இதே வேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருட தைப்பொங்கல் வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக சங்கானையில் பொங்கல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் இன்று இரவு வரை பொங்கல் வியாபாரம் சூடு பிடிக்குமென எதிர்பார்ப்பதாகவும் வியாபாரிகள் எமது செய்திப் பிரிவிற்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- யாழ்.லக்சன்.}

No comments

Powered by Blogger.