ஒரு இலட்சம் இளையோர்களுக்கு விரைவில் அரச சேவையில் நியமனங்கள்!!!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் இளையோர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

‘அபிவிருத்தி பணி உதவி சேவை’ என்ற பெயரில் சேவை ஒன்றை ஏற்படுத்தி அரச பாடசாலைகளில் தரம் 8 சித்தி எய்திய 100,000 இளையோர்களை இந்த சேவையில் இணைத்துக்கொள்ள மகாவலி, விவசாய நீர்ப்பாசன, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறைந்த கல்வித் தகுதிகளுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.