மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

மன்னார் மாவட்டத்தில் இவ் வருடம் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஓதுக்கீடுகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸின் ஏற்பாட்டில், வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்,மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர்கள் உற்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேளைத்திட்டங்கள் குறித்தும் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் பல்வேறு திட்டங்களை உள் வாங்குவது தொடர்பாகவும்வீதி அபிவிருத்தி,சுகாதாரத்திட்டத்தை மேம்படுத்துதல், விவசாயம், மீன் பிடி நடவடிக்கைளை ஊக்குவித்தல் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

குறித்த திட்டங்கள் தொடர்பாகவும், ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்து எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் திட்டத்தை சமர்பிக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.