எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கான தீர்வினை அரசு பெற்றுக் கொடுக்கும்; டக்ளஸ் தேவானந்தா!!

Image result for டக்ளஸ் தேவானந்தா
கூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அந்த வகையில், இந்த தைப்பொங்கல் மகிழ்ச்சி கரமானதாக அமைந்துள்ளதுடன், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும்ஏற்படுத்தியுள்ளது.

தோட்டத்தொழிலாளர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வுகோரி போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக எங்களுடைய அரசாங்கம் 1000 ரூபாய் சம்பள உயர்வை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியிருக்கின்றார்.

ஆகவே, கூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கும் எமது அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.